Paristamil Navigation Paristamil advert login

சீனாவில் நோரா வைரஸ் - 100-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

சீனாவில் நோரா வைரஸ் - 100-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

17 தை 2026 சனி 17:59 | பார்வைகள் : 682


சீனாவின் குவாங்டாங் மாகாண உயர்நிலை பள்ளி ஒன்றில் படித்து வரும் மாணவர்களில் 100-க்கும் மேற்பட்டோருக்கு நோரா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மாணவர்கள் அனைவரும் சீரான நிலையில் உள்ளதாகவும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை எனவும் தகவல் தெரிவிக்கின்றது.

இதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுகாதார கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

அதேவேளை சீனாவில் பொதுவாக அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் இந்த தொற்று பரவல் அதிகரித்து காணப்படும்.

இது அதிக தொற்றும் தன்மை கொண்டதுடன், உலகளவில் சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்த கூடியது. ஆண்டுதோறும் கோடிக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை இது ஏற்படுத்தும் என்பதுடன் , 5 வயதுக்குட்பட்ட 20 கோடி குழந்தைகள் உள்பட 68.5 கோடி பேருக்கு ஆண்டுதோறும் பாதிப்பு ஏற்படுகிறது என தகவல் தெரிவிக்கின்றது.

வர்த்தக‌ விளம்பரங்கள்