சிரஞ்சீவி - நயன்தாரா படத்தில் இளையராஜா இசையமைத்த பாடல்...
17 தை 2026 சனி 16:05 | பார்வைகள் : 198
கடந்த சில வருடங்களாகவே இளையராஜா காப்புரிமை என்கிற போர்க்கொடியை தூக்கிப் பிடித்து வருகிறார். அவரது பாடலை உரிய அனுமதி இல்லாமல் வியாபாரரீதியாக பயன்படுத்தும்போது அதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்.
குறிப்பாக அவரிடம் அனுமதி பெறாமல் அவரின் பாடலை திரைப்படங்களில் பயன்படுத்தும் போது அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகிறார். இது பட தயாரிப்பாளருக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. பல பட நிறுவனங்களுக்கும் இளையராஜா இப்படி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி பட நிறுவனமும் இந்த பிரச்சனையை சந்தித்தது.
இளையராஜா ஒரு படத்திற்கு இசையமைத்தவுடன் அந்த பாடல்களை அந்த படத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும், வேறு படங்களுக்கு கொடுக்கக் கூடாது என தயாரிப்பாளர்களிடம் ஒப்பந்தம் போடுவதாக சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில்தான் இளையராஜா வழக்கு தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சிரஞ்சீவி, நயன்தாரா இணைந்து நடித்த பொங்கல் பண்டிகைக்கு வழியாக உள்ள தெலுங்கு படமான ‘மன ஷங்கர வரபிரசாத் காரு’ படத்தில் என்கிற தெலுங்கு படத்தில் தளபதி படத்தில் இளையராஜா இசையமைத்த ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
‘இது எப்படி சாத்தியமாயிற்று?’ என அப்படத்தின் இயக்குனர் அணில் ரவிப்புடியிடம் கேட்டபோது எங்கள் தயாரிப்பாளர்கள் இளையராஜா சாரை அணுகி முறையாக அனுமதி கேட்டார்கள். இளையராஜாவும் சம்மதித்தார்.. எல்லாவற்றிற்கும் ஒரு அழகான நடைமுறை இருக்கிறது’ அதை சரியாக செய்தால் சர்ச்சை வராது’ என அவர் பதில் சொல்லியிருக்கிறார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan