Paristamil Navigation Paristamil advert login

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் பற்றி தெரியுமா?

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் பற்றி  தெரியுமா?

17 தை 2026 சனி 15:43 | பார்வைகள் : 206


பொதுவாக குளிர்காலம் தொடங்கிவிட்டாலே குளிர்ந்த காற்றுடன் சேர்ந்து கிருமிகளும் பரவும். குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதால், இந்த பருவம் அவர்களுக்கு இன்னும் கடினமாக இருக்கலாம். எனவே குழந்தைகளுக்குத் தொண்டை வலி, சளி, இருமல் மற்றும் உடல் சோர்வு போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்படுவது வழக்கம். இதுதவிர இந்த பருவநிலையில் குழந்தைகளுக்குக் காய்ச்சல் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது.

பருவகால காய்ச்சலிலிருந்து தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க பெற்றோர்கள் எல்லா வழிகளிலும் முயற்சி செய்கிறார்கள், ஆனாலும் அவர்கள் நோய்க்கு ஆளாகின்றனர். இந்நிலையில், மருந்துகள் எடுத்துக் கொள்ளாமலேயே வைரஸ் கிருமிகளை எதிர்த்துப் போராடவும், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், குறிப்பிட்ட சில இயற்கை உணவுகள் உதவுவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.எனவே பெற்றோர்களே கவனியுங்கள், காலை உணவு, சிற்றுண்டி அல்லது இரவு உணவு என எதுவாக இருந்தாலும் உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய 5 முக்கிய குளிர்கால உணவுகள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

கம்பு மற்றும் ராகி:குளிர்காலத்தில் குழந்தைகளுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதில் கம்பு மற்றும் ராகி முக்கியப் பங்கு வகிக்கின்றன. அயன் மற்றும் ஜின்க் நிறைந்துள்ள இந்த சிறுதானியங்கள், நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடி, தொற்றுநோய்களிலிருந்து குழந்தைகளைக் காப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் வளர்ச்சிக்கும் உதவுகின்றன.

நட்ஸ் மற்றும் விதைகள்:நட்ஸ் மற்றும் விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் வைட்டமின் 'ஈ' சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளின் மூளைத் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன.

பழங்கள் மற்றும் காய்கறிகள்:பப்பாளி, கேரட் போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகள், நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே அதிகரிக்கின்றன. வைட்டமின்கள் 'சி', 'ஏ' மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இவை, தொற்றுகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கின்றன.

மஞ்சள் பால்:'கோல்டன் மில்க்' எனப்படும் மஞ்சள் பாலானது குளிர்காலத்திற்கான ஒரு சிறந்த டானிக் ஆகும். இதிலுள்ள குர்குமினானது, வைரஸ் மற்றும் ஆன்டிஇன்ஃபிளமேட்டரி பண்புகளைக் கொண்டுள்ளது. இது குழந்தைகளுக்கு ஆழ்ந்த உறக்கத்தையும், மன அமைதியையும் தருகிறது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு:இந்த பட்டியலில் இறுதியாக உள்ளது சர்க்கரைவள்ளிக் கிழங்கு. இதில் பீட்டா-கரோட்டின் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சளித் தொல்லையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கிறது.இந்தியாவில் குளிர் அதிகரித்து வரும் இந்த வேளையில், சூப், ஸ்மூத்தி அல்லது குக்கீஸ் வடிவிலாவது இந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்து, உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்