ரூ.13,000 கோடியை குடும்பத்திற்காக நிராகரித்த மெஸ்ஸி - அணித் தலைவர் சொன்ன விடயம்
17 தை 2026 சனி 10:08 | பார்வைகள் : 117
ரூ.13,000 கோடியை குடும்பத்திற்காக மெஸ்ஸி நிராகரித்தாக Al Ittihad அணித் தலைவர் தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினாவை சேர்ந்த பிரபல கால்பந்து ஜாம்பவானான லியோனல் மெஸ்ஸிக்கு உலக அளவில் பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு.
சமீபத்தில், இந்தியா வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மெஸ்ஸிக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
2025 ஆம் ஆண்டில், மட்டும் 130 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டியுள்ள மெஸ்ஸி, 2025 ஆம் ஆண்டில் அதிக சம்பாதித்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார்.
இந்த நிலையில், மெஸ்ஸி பல ஆயிரம் கோடி வருமான வாய்ப்பை குடும்பத்திற்காக நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2021 ஆம் ஆண்டு முதல் PSG அணிக்காக விளையாடி வந்த மெஸ்ஸி, 2023 ஆம் ஆண்டில் அந்த ஒப்பந்தம் முடிவடைந்து, தற்போது இண்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.
2023 ஆம் ஆண்டில் Al Ittihad அணியில் விளையாட வந்த வாய்ப்பை மெஸ்ஸி நிராகரித்துள்ளார்.
இது குறித்து பேசிய Al Ittihad அணி தலைவர் Anmar Al Haili, "PSG உடனான அவரது ஒப்பந்தம் முடிந்ததும் நான் அவரைத் தொடர்பு கொண்டேன். நான் அவருக்கு €1.4 பில்லியன்(அன்றைய மதிப்பில் சுமார் ரூ13,000 கோடி) வழங்க முன்வந்தேன்.
ஆனால் இவ்வளவு பெரிய சலுகையை அவர் தனது குடும்பத்திற்காக நிராகரித்தார். பணத்தை விட குடும்பம் முக்கியமானது. குடும்பத்திற்காக ஒரு வீரர் இவ்வளவு பெரிய சலுகையை மறுத்தது ஆச்சரியமாக உள்ளது. நான் இதை மதிக்கிறேன்.
மெஸ்ஸி எப்போது விரும்பினாலும் அவர் மீண்டும் எங்கள் அணிக்கு வரலாம். அவர் கேட்கும் தொகையை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். அது வாழ்நாள் முழுவதும் கூட இருக்கலாம். அவர் எப்போது வேண்டுமானாலும் வரலாம்" என தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan