வங்காளதேசத்தில் இந்து ஆசிரியர் வீட்டுக்கு தீவைத்த மர்ம கும்பல்
17 தை 2026 சனி 06:36 | பார்வைகள் : 213
வங்காளதேசத்தில் மாணவர் இயக்க தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.
8 இந்துக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்துக்கள் வீடுகள், கடைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் சில்ஹெட் மாவட்டம் கோவாயின்காட் உபஜிலாவில் வசிக்கும் ஆசிரியர் பிரேந்திர குமார் டே என்பவரின் வீட்டுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது.
உடனே வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்து தப்பினர். ஆனால் வீடு முழுவதும் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
ஆனால் இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள இந்து குடும்பங்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை மீண்டும் ஏற்படுத்தி உள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan