Paristamil Navigation Paristamil advert login

குளிர்மைக் கண்ணாடி அணிந்து சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி மக்ரோன்!!

குளிர்மைக் கண்ணாடி அணிந்து சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி மக்ரோன்!!

17 தை 2026 சனி 07:00 | பார்வைகள் : 1975


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்று ஜனவரி 16, வெள்ளிக்கிழமை எலிசேமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் ‘கூலிங்கிளாஸ்’ அணிந்துகொண்டு கலந்துகொண்டார்.

மிக அரிதான இந்த நிகழ்வு, ஜனாதிபதியின் கண்களில் ஏற்பட்ட சிறிய நோய் காரணமாக இடம்பெற்றது. “நான் கண்ணாடி அணிந்திருப்பதற்காக நீங்கள் என்னை மன்னிக்கவேண்டும், கண்களில் ஏற்பட்ட சிறிய பிரச்சனை காரணமாக அணிந்திருக்கிறேன்!” என சந்திப்பு தொடங்கும் முன்னர் அவர் தெரிவித்தார்.

இதற்கு முந்தைய நாள், Bouches-du-Rhône நகரில் உள்ள இராணுவ முகாமுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மக்ரோன், சிவந்த கண்களோடு காணப்பட்டார். அதன் பின்னர் அவர் ‘கூலிங் கிளாஸ்’ ஒன்றை அணிய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

நேற்று எலிசே மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் Nouvelle-Calédonie தீவின்  நிர்வாக எதிர்காலம் குறித்து விவாதிக்கப்பட்டது.

வர்த்தக‌ விளம்பரங்கள்