Paristamil Navigation Paristamil advert login

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. தவெக தலைவர் விஜய் முக்கிய அறிவிப்பு!

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. தவெக தலைவர் விஜய்  முக்கிய அறிவிப்பு!

17 தை 2026 சனி 10:02 | பார்வைகள் : 228


சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தவெக விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத் தோழர்களுக்கு வணக்கம். தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாநில, மாவட்ட, தொகுதி அளவிலான தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள, பின்வரும் முறையில், தேர்தல் பிரசாரக் குழு அமைக்கப்படுகிறது. அதன்படி தேர்தல் பிரசாரக் குழு விவரம் வெளியிடப்படுகிறது.

அதில் 1. N.ஆனந்த், 2. ஆதவ் அர்ஜுனா B.A., 3. K.A.செங்கோட்டையன், 4. A.பார்த்திபன், 5. B.ராஜ்குமார் DME, 6. K.V.விஜய் தாமு, 7. S.P.செல்வம் DCE, 8. பிச்சை ரத்தினம் கரிகாலன், 9. M.செரவு மைதின் (எ) நியாஸ், 10. J.கேத்ரின் பாண்டியன் M.A., B.Ed., ஆகியோர் மேற்கண்ட குழு, 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும். இக்குழுவிற்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று அறிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்