மன்னார் கடலில் மூழ்கி இருவர் உயிரிழப்பு - ஒருவரை காணவில்லை
16 தை 2026 வெள்ளி 15:34 | பார்வைகள் : 156
மன்னார் - பேசாலை கடற்பரப்பில் நீராடச் சென்ற 4 பேரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுள்ள நிலையில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குறித்த நான்கு பேரும் கடலில் நீராடுவதற்காகச் சென்றுள்ளனர்.
நீராடச் சென்றவர்களில் இருவர் உயிரிழந்ததுடன், மற்றைய இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன மற்றையவரை தேடு பணி இடம்பெற்று வருவதாக தெரியவருகிறது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan