காதலர் தினத்தில் நடிகர் தனுஷ் திருமணம் ?
16 தை 2026 வெள்ளி 13:39 | பார்வைகள் : 222
கடந்த 2002-ம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் தனுஷ். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். கடந்த 2004-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உண்டு.
கிட்டதட்ட 20 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தம்பதியினர் கடந்த 2024-ம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். தனது பட இசை வெளியீட்டு விழாக்களில் தனுஷ் தனது மகன்களுடன் கலந்துகொள்வார். விவாகரத்துக்குப் பிறகு தனுஷ் சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் அவர் நடிகை மிருணாள் தாக்கூரை வரும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிருணாள் தாக்கூரை பொறுத்தவரை தெலுங்கில் வெளியான ‘சீதா ராமம்’ படத்தின் மூலம் பான் இந்தியா அளவில் கவனம் ஈர்த்தவர். இவர் நடிப்பில் வெளியான ‘ஜெர்ஸி’, ‘ஹாய் நானா’ ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. அல்லு அர்ஜூன் நடிப்பில் அட்லீ இயக்கும் படத்தில் மிருணாள் தாக்கூர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
42 வயதான தனுஷூக்கும் 33 வயதான மிருணாள் தாக்கூருக்கும் திருமணம் நடைபெற உள்ள தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு எளிமையான முறையில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக மிருணாள் தாக்கூர் நடிப்பில் வெளியான ‘சன் ஆஃப் சர்தார்’ படத்தின் சிறப்பு திரையிடலின்போது நடிகர் தனுஷ் மும்பை சென்று அதில் கலந்துகொண்டார்.
அப்போது தனுஷ் - மிருணாள் தாக்கூர் இருவரும் கைகோர்த்து நடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த நிகழ்வில், அவர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக பேசிக்கொண்ட காட்சிகளும் கவனம் பெற்றன. அப்போதிலிருந்து இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் பரவ தொடங்கின.
அடுத்து தனுஷின் ‘தேரே இஷ்க் மே’ படத்தின் வெற்றிவிழாவில் மிருணாள் தாகூர் கலந்துகொண்டிருந்தார். ஆனால், படத்தில் அவர் நடிக்கவில்லை. இருப்பினும் விழாவில் தனுஷூக்காக கலந்துகொண்டதாக பேசப்பட்டது. தனுஷின் இரு சகோதரிகளையும் மிருணாள் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார் என்பதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
தனுஷ் - மிருணாள் திருமணம் குறித்த எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. வதந்திகளாகவே சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த வதந்திகள் குறித்து பேசியிருந்த மிருணாள் தாகூர், “தனுஷ் என் நல்ல நண்பர் மட்டுமே. இது எல்லாம் வேடிக்கையான வதந்தி" என்று அவர் கூறியிருந்தார். மேலும், அந்த மும்பை நிகழ்வுக்கு தனுஷ் அல்ல, நடிகர் அஜய் தேவ்கன் தான் தன்னை அழைத்ததாகவும் அவர் விளக்கம் அளித்தார். இதுவரை இந்த விஷயம் குறித்து தனுஷ் தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan