2025 ஆம் ஆண்டில் அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்கள்
16 தை 2026 வெள்ளி 11:29 | பார்வைகள் : 112
2025 ஆம் ஆண்டில் அதிக வருமானம் ஈட்டிய விளையாட்டு வீரர்களின் பட்டியலை sportico என்ற தளம் வெளியிட்டுள்ளது.
முதல் 100 பேர் உள்ள தரவரிசையில், 8 விளையாட்டுகளில் உள்ள 28 நாடுகளை சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். முதல் 100 இடங்களில் ஒரு பெண் வீராங்கனை கூட இடம்பெறவில்லை.
இந்த பட்டியலில், பிரபல கால்பந்து வீரரான போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார்.
2025 ஆம் ஆண்டில் 260 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.2349 கோடி) வருமானம் ஈட்டியுள்ளார்.
மெக்சிகோவை சேர்ந்த குத்துச்சண்டை வீரரான அல்வாரெஸ் மெஸ்ஸி, 137 மில்லியன் டொலர் உடன் 2வது இடத்தில் உள்ளார்.
அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 130 மில்லியன் டொலர் வருமானத்துடன் 3வது இடத்தில் உள்ளார்.
பேஸ்பால் வீரர் ஜுவான் சோட்டோ, 129.2 மில்லியன் டொலருடன் 4வது இடத்தில் உள்ளார்.
அமெரிக்க கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ், 128.7 மில்லியன் டொலர்களுடன் 5வது இடத்தில் உள்ளார்.
இதில் அதிகபட்சமாக கூடைப்பந்து விளையாட்டை சேர்ந்த 40 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கால்பந்து வீரர்கள் 22 பேர் உள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan