தாய்லாந்தில் மீண்டுமொரு கிரேன் சரிந்து கார்களின் மீது விழுந்ததில் 2 பேர் பலி!
16 தை 2026 வெள்ளி 08:07 | பார்வைகள் : 301
தாய்லாந்து நாட்டில் நேற்றும் 15.01.2026 மற்றுமொரு கிரேன் சரிந்து விழுந்ததில் இரண்டு கார்கள் நொறுங்கி, சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்து இடம்பெற்றதற்கு முதல்நாள் (14) நகோன் ரச்சசீமா மாகாணத்திலிருந்து சிகியோ மாவட்டத்தில் பயணித்துக்கொண்டிருந்த ரயில் மீதும் கிரேன் ஒன்று விழுந்ததில் இதுவரை 32 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில் தற்போது மற்றுமொரு கிரேன் விழுந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பெங்கொக்கிலிருந்து சமுதத் சகோன் மாகாணத்தின் பாங்குன் தியான் வரை ரமா 2 என்ற நெடுஞ்சாலையில் அபிவிருத்திப் பணிகள் நடைபெற்று வருகிறது.
15.01.2026 அப்பகுதியில் மேம்பால வீதி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோதே அங்கிருந்த கிரேன் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் இரண்டு கார்கள் சேதமடைந்துள்ளன. அவ்வேளை அவ்வாகனங்களுக்குள் இருந்த இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அப்பகுதியில் மீட்புக்குழுவினர் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபடுவதில் பெரும் சிரமங்கள் இருப்பதாக கூறப்படும் அதேவேளை அங்கு வேறு வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனவா என்பதை அறியவும் கடினமான நிலை ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அப்பகுதியில் இரும்புத்தகடுகள் தொங்கிக்கொண்டிருப்பதால் மேலும் இடிபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மீட்புக்குழுவினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அந்த நெடுஞ்சாலையில் கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 150 பேர் உயிரிழந்த காரணத்தினால் நேற்றைய விபத்துக்குப் பின்னர், குறித்த அவ்வீதி “மரண வீதி” என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan