அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு நோபல் அமைதிப் பரிசு
16 தை 2026 வெள்ளி 07:55 | பார்வைகள் : 328
வெனிசுவெலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தான் பெற்ற 2025ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசினை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் வழங்கியதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்தபோதே அவரது அமைதிக்கான நோபல் பரிசுப் பதக்கத்தை ட்ரம்புக்கு வழங்கி கௌரவித்திருந்தார்.
அதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த மரியா கொரினா மச்சாடோ, ட்ரம்புக்கு தனது நோபல் பரிசை வழங்கியதாக கூறினார்.
அத்துடன், நமது சுதந்திரத்துக்கான ட்ரம்பின் தனித்துவமான அர்ப்பணிப்புக்கான அங்கீகாரமாகும். நாங்கள் ஜனாதிபதி ட்ரம்பை நம்பலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ஜனாதிபதி ட்ரம்ப் வெனிசுவெலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவை ஓவல் அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது அவர் அதிபர் ட்ரம்புக்கான அங்கீகாரமாக தனது அமைதிக்கான நோபல் பரிசை வழங்கி கௌரவித்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan