Paristamil Navigation Paristamil advert login

Parc Astérix: மீண்டும் அதிகரிக்கும் நுழைவுக்கட்டணம் !!

Parc Astérix: மீண்டும் அதிகரிக்கும் நுழைவுக்கட்டணம் !!

15 தை 2026 வியாழன் 21:41 | பார்வைகள் : 1562


புகழ்பெற்ற பொழுதுபோக்கு பூங்கா பார்க் அஸ்டெரிக்ஸ் (Parc Astérix), 2026 ஆம் ஆண்டுக்கான  நுழைவுக் கட்டணங்களை மீண்டும் உயர்த்தியுள்ளது. ஏப்ரல் 4 முதல் ஆரம்பமாகும் புதிய சீசனுக்கான வெளியிடப்பட்ட கட்டண பட்டியலில், வயது வந்தோருக்கான “Liberté Flex” கட்டணம் 68 யூரோவாகவும், “Billet Futé” கட்டணம் 56 யூரோவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான கட்டணங்களும் Liberté Flex 59 யூரோவாகவும், Billet Futé 53 யூரோவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த விலை உயர்வுகள், பூங்காவில் மேற்கொள்ளப்படும் பெரும் முதலீட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என பூங்கா நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. முக்கிய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் தங்களது கட்டணங்கள் இன்னும் குறைவாகவே உள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது, மேலும் ஆண்டு முழுவதும் பல்வேறு சலுகைகள் தொடரும் என்றும் அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஏப்ரல் 7 முதல் மே 7 வரை ஒரு பெரியவர் நுழைவு சீட்டு வாங்கினால், ஒரு குழந்தைக்கு நுழைவு சீட்டு இலவசமாக வழங்கப்படும்.

2030 ஆம் ஆண்டுக்குள் 250 மில்லியன் யூரோக்கள் முதலீடு செய்யும் இலக்குடன் பார்க் அஸ்டெரிக்ஸ் முன்னேறி வருகிறது. 2025 இல் 2.9 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ள இந்த பூங்கா, விரைவில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2026 இல் பல பகுதிகள் முழுமையாக மாற்றியமைக்கப்பட்டு, புதிய பெயர்களுடன் பல முக்கிய விளையாட்டுகள் மற்றும் புதிய உணவு வகைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதற்கிடையில் வாகன நிறுத்துமிடக் கட்டணம் 20 யூரோவாக மாற்றமின்றி தொடரும் எனவும் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்