Paristamil Navigation Paristamil advert login

அடையாள அட்டை, கடவுச் சீட்டு, ஓட்டுனர் உரிமம் - போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த நால்வர் கைது..!!

அடையாள அட்டை, கடவுச் சீட்டு, ஓட்டுனர் உரிமம் - போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த நால்வர் கைது..!!

15 தை 2026 வியாழன் 18:21 | பார்வைகள் : 661


அடையாள அட்டை, கடவுச் சீட்டும் ஓட்டுனர் உரிமம் என போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்த நால்வர் கொண்ட குழு ஒன்று கைது செய்யப்படடுள்ளது.

இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்குள் அவர்கள் கைது செய்யப்பட்டடதாக தெரிவிக்கப்படுகிறது. சாள்-து-கோல் விமான நிலையம் ஊடாக அதிகளை கடத்தி வருவதும், அவர்களுக்கு போலியான ஆவணங்கள் தயாரித்து கொடுப்பதும் என இந்த குழு பல சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது.

குறிப்பாக டெலிகிராம் செயலி ஊடாக தங்களது வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், 2024 ஆம் ஆண்டு இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இந்த வார செவ்வாய்க்கிழமை காலை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

25 தொடக்கம் 30 வயது வரையுள்ள நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்