Paristamil Navigation Paristamil advert login

RER B ரயில் நிலையத்தில் 17 வயது மாணவி தற்கொலை: பாடசாலை துன்புறுத்தல் காரணமா?

RER B ரயில் நிலையத்தில் 17 வயது மாணவி தற்கொலை: பாடசாலை துன்புறுத்தல் காரணமா?

15 தை 2026 வியாழன் 14:47 | பார்வைகள் : 1071


Seine-et-Marne பகுதியில் உள்ள Mitry-Mory நகரின் RER B ரயில் நிலையத்தில், 17 வயதான ஒரு பாடசாலை மாணவி தற்கொலை செய்துள்ளார். 

அவர் பால்சாக் உயர்நிலைப் பாடசாலையில் (lycée Balzac de Mitry-Mory) படித்து வந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, Meaux அரசு வழக்கறிஞர் அலுவலகம் இரண்டு விசாரணைகளை தொடங்கியுள்ளது. ஒன்று மரணத்தின் காரணங்களை கண்டறியவும், மற்றொன்று பாடசாலை துன்புறுத்தல் காரணமாக தற்கொலை நடந்ததா? என்பதை ஆராயவும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த குற்றத்திற்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

பாதிக்கப்பட்ட மாணவி கடந்த டிசம்பர் மாதம் முதல் பாடசாலையில் துன்புறுத்தலுக்கு (harcèlement scolaire) உள்ளாகி வந்ததாக அவரது குடும்பம் தெரிவித்துள்ளது. ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் தகவல் அளிக்கப்பட்ட போதிலும், ஜனவரி மாதம் பாடசாலை திறந்த பிறகும் நிலைமை மேம்படவில்லை என்று குடும்பம் குற்றம்சாட்டுகிறது. 

மேலும், பாதிக்கப்பட்ட மாணவி, தன் மரண நாளிலேயே பள்ளி முதல்வரால் அழைக்கப்பட்டதாக குடும்பம் கூறுகிறது. இந்த தற்கொலைக்குப் பிறகு, பாடசாலை நிர்வாக பணியாளர்கள் சமூக வலைதளங்களில் மிரட்டல்களுக்கு உள்ளாகியுள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். (பொதுப் பணியில் ஈடுபடும் நபர்களுக்கு எதிரான மிரட்டல்களுக்கு அதிகபட்ச தண்டனையாக 5 ஆண்டுகளும் உளவியல் துன்புறுத்தலுக்கு 3 ஆண்டுகள் தண்டனையும் விதிக்கப்படலாம்.)

அதே நேரத்தில், சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் சில மாணவர்களும் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். விசாரணைகள் தொடக்க நிலையில் உள்ளதால், உண்மைகள் முழுமையாக வெளிவரும் வரை அமைதியும் பொறுமையும் அவசியம் என அரசு வழக்கறிஞர் வலியுறுத்தியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்