Paristamil Navigation Paristamil advert login

ஜனநாயகன் படத்துக்கு தொடரும் சிக்கல்!

ஜனநாயகன் படத்துக்கு  தொடரும்   சிக்கல்!

15 தை 2026 வியாழன் 14:37 | பார்வைகள் : 220


நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் வழங்காததால் பொங்கல் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தணிக்கை வாரியம் சென்சார் சர்டிபிகேட் வழங்காததால் பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதை விசாரித்த தனி நீதிபதி ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்து தணிக்கை வாரியம் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை அதிரடியாக ரத்து செய்தனர். இந்த வழக்கையும் ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதனை எதிர்த்து பட தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றம் சென்றது. தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என தணிக்கை வாரியமும் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த நிலையில், ஜனநாயகன் சென்சார் சர்டிபிகேட் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், பட தயாரிப்பு நிறுவனத்தின் மேல்முறையீட்டு தள்ளுபடி செய்து நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.

அப்போது 'ஜனநாயகன் படத்துக்கு 5,000 படத்துக்கு புக் செய்திருந்தோம். ஆனால் உயர்நீதிமன்றம் இதை கருத்தில் கொள்ளவில்லை. மக்கள் ஒரு படத்துக்காக 3 மாதங்களுக்கு மேலாக காத்திருக்க மாட்டார்கள்' என பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபங் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் ''ஜனநாயகன் பட வழக்கை விசாரிக்க எங்களுக்கு விருப்பம் இல்லை. உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதால் நாங்கள் தலையிட வேண்டிய அவசியல்லை. உயர்நீதிமன்றத்தில் உங்கள் தரப்பு கோரிக்கைகளை எடுத்துக் கூறுங்கள்'' என்று கூறி தள்ளுபடி செய்தனர்.

🔥 இன்றைய சிறப்பு சலுகை

வர்த்தக‌ விளம்பரங்கள்