சவுதி அரேபியாவின் மூத்த குடிமகனான கருதப்படும் 142 முதியவர் காலமானார்
15 தை 2026 வியாழன் 13:37 | பார்வைகள் : 495
சவுதி அரேபியாவின் மூத்த குடிமகனான கருதப்படும் 142 வயது ஷேக் நாசர் பின் ரதான் அல் ரஷித் அல் வதாய் காலமானார்.
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் வாழ்ந்து வந்த ஷேக் நாசர் பின் ரதான் அல் ரஷித் அல் வதாய்(Sheikh Nasar bin Raddan Al Rashid Al Wadai) என்ற 142 வயது மூத்த குடிமகன் இயற்கை எய்தினார்.
ரியாத்தில் நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கில் அரசியல், மத மற்றும் சமூகத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இவர் கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுகள் கண்ட இருப்பது உலகெங்கிலும் உள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஷேக் நாசர் பின் 142 வருடம் வாழ்ந்தது மட்டுமின்றி அவருடைய சுறுசுறுப்பாகவும் பாராட்டப்பட்டுள்ளார்.
அவர் தன்னுடைய 110 வது வயதில் திருமணம் செய்து கொண்டதுடன், அந்த திருமணம் மூலம் பெண் குழந்தை ஒன்றுக்கு தந்தையாகவும் மாறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இவரது மன தெளிவு மற்றும் உடல் உறுதியை பார்த்து மருத்துவ ஆராய்ச்சியாளர் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
ஷேக் நாசர் பின் இந்த சிறந்த வாழ்விற்கு அவரது தனி மனித ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு முக்கிய காரணம் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஷேக் நாசர் பின் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை கொண்டவராகவும், 40 முறை ஹஜ் புனிதப் பயணம் செய்துள்ளார்.
நவீன கால வசதிகள் பெருகி வந்தாலும், அவர் எளிமையான உணவையும், தீவிரமான நேர மேலாண்மையையும் கடை பிடித்துள்ளார்.
அவர் 134 பேரை கொண்ட குடும்பத்தின் தலைவராக ஷேக் நாசர் பின் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan