நிலவில் அமைய உள்ள ஹொட்டல் - தங்குவதற்கு இத்தனை கோடி கட்டணமா?
15 தை 2026 வியாழன் 11:30 | பார்வைகள் : 116
2032 ஆம் ஆண்டிற்குள் நிலவில் ஹொட்டல் ஒன்றை அமைக்கும் முயற்சியில் அமெரிக்கா நிறுவனம் இறங்கியுள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி வரும் உலக நாடுகள் மீண்டும் நிலவிற்கு மனிதனை அனுப்ப திட்டமிட்டு வருகின்றன.
அமெரிக்காவின் நாசா, 1969 முதல் 1972 வரை நிலவுக்கு 6 முறை மனிதர்களை அனுப்பிய நிலையில், அதன் பின்னர் தற்போது வரை மனிதர்கள் சென்றதில்லை.
2028 ஆம் ஆண்டில் அமெரிக்காவும், 2030 ஆம் ஆண்டில் சீனாவும், 2040 ஆம் ஆண்டில் இந்தியாவும் நிலவிற்கு மனிதர்களை அனுப்புவதை இலக்காக வைத்து செயலாற்றி வருகிறது.
இந்த நிலையில், நிலவில் ஹொட்டல் அமைக்கும் முயற்சியில் அமெரிக்கா நிறுவனம் ஒன்று இறங்கியுள்ளது.
கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட gru space என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், 2032 ஆம் ஆண்டிற்குள் நிலவில் ஹொட்டல் ஒன்றை திறக்க திட்டமிட்டுள்ளது.
கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் மற்றும் கணினி அறிவியலில் பட்டதாரியான 21 வயதான ஸ்கைலர் சான்(Skyler Chan) என்ற இளைஞர் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
SpaceX, Nvidia உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
2029 ஆம் ஆண்டில் நிலவில் கட்டுமானத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள நிறுவனம், 2032 ஆம் ஆண்டில் கட்டுமானத்தை முடித்து, தொடக்கத்தில் 4 பேர் முதல் 10 பேர் வரை தங்கும் வகையில் ஹொட்டல் இருக்கும் என தெரிவித்துள்ளது. நிலவில் உள்ள மணல் போன்ற கட்டுமான பொருட்களை வைத்தே இந்த ஹோட்டலை கட்ட திட்டமிட்டுள்ளனர்.
கட்டணம் இறுதி விலை நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும், தங்குவதற்கு 10 மில்லியன் டொலருக்கும்(இந்திய மதிப்பில் ரூ.90 கோடி) அதிகமாக செலவாகும் என்றும், 1,000 டொலர் திரும்பப் பெற முடியாத விண்ணப்பக் கட்டணம் தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், வைப்புத்தொகையாக 250,000 முதல் 1 மில்லியன் டொலர் வரை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் விண்ணப்பங்களை மதிப்பாய்வு செய்து, 2027 ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட தகுதியான நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும், 2031 ஆம் ஆண்டில் விண்வெளி செல்வதற்காக பயிற்சி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
பெரும் தொழிலதிபர்கள் மற்றும் வித்தியாசமான முறையில் தேனிலவு கொண்டாட விரும்பும் புதுமணத் தம்பதிகள் இதன் ஆரம்பகட்ட வாடிக்கையாளர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாஸ்க்கு சொந்தமான ப்ளூ ஆர்ஜின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதர்களை விண்வெளி சுற்றுலா அழைத்துச் சென்று வருகிறது. இதில் ஒரு நபருக்கு தோராயமாக 2,00,000 டொலர் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதுவரை 15 ஆம் அதிகமான பயணம் மூலம் 50க்கும் மேற்பட்ட நபர்களை, பூமியில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் உயரத்தை தாண்டி, கார்மன் கோடு என்று அழைக்கப்படும் விண்வெளியின் எல்லைக்கு சற்று மேலே அழைத்து சென்று விண்வெளியின் எடையற்ற தன்மையை அனுபவிக்க வைத்து அழைத்து வந்துள்ளது ப்ளூ ஆர்ஜின்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan