புதிய Apple Creator Studio அறிமுகம்
15 தை 2026 வியாழன் 11:17 | பார்வைகள் : 143
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான Apple, தனது புதிய Apple Creator Studio சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது வீடியோ எடிட்டிங், இசை உருவாக்கம், கிரியேட்டிவ் இமேஜிங் மற்றும் visual productivity ஆகியவற்றுக்கான சக்திவாய்ந்த ஆப்ஸ் தொகுப்பாகும்.
இந்த Creator Studio-வில், Final Cut Pro புதிய வீடியோ எடிட்டிங் கருவிகளுடன் Mac மற்றும் iPad-களுக்கு வந்துள்ளது.
Pixelmator Pro முதல் முறையாக iPad-க்கு அறிமுகமாகி, Apple Pencil-க்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Logic Pro இசை உருவாக்கத்தில் Synth Player மற்றும் Chord ID போன்ற புதிய அம்சங்களை கொண்டு, இசை தயாரிப்பாளர்களுக்கு ஊக்கமளிக்கிறது.
மேலும், Keynote, Pages, Numbers, Freeform போன்ற ஆப்ஸ்கள் புதிய premium content மற்றும் intelligent features உடன் Mac, iPad, iPhone-ல் கிடைக்கின்றன.
Apple Creator Studio, ஜனவரி 28, 2026 முதல் App Store-ல் கிடைக்கும். மாத சந்தா 12.99 டொலர் அல்லது வருட சந்தா 129 டொலர் ஆகும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு சலுகையாக மாதம் 2.99 டொலர் அல்லது வருடம் 29.99 டொலர் மட்டுமே செலுத்தினால் போதும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan