Paristamil Navigation Paristamil advert login

ஈரான்–கிரீன்லாந்து விவகாரம்: எலிசே அரண்மனையில் அவசர பாதுகாப்பு கூட்டம்!!

ஈரான்–கிரீன்லாந்து விவகாரம்: எலிசே அரண்மனையில் அவசர பாதுகாப்பு கூட்டம்!!

15 தை 2026 வியாழன் 07:32 | பார்வைகள் : 706


ஈரான் மற்றும் கிரீன்லாந்து தொடர்பான தற்போதைய நிலைமையைப் பற்றி விவாதிக்க, ஜனவரி 15 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 8 மணிக்கு எலிசே அரண்மனையில் அவசர பாதுகாப்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. 

ஈரானில் நடைபெறும் போராட்டங்கள் அதிகாரிகளால் கடுமையாக அடக்கப்படுவது மற்றும் கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்ற டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் ஆகியவை இந்தக் கூட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். இந்தக் கூட்டத்திற்கு ஜனாதிபதி எமானுவேல் மக்ரோன் தலைமை தாங்கி, தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் இராணுவத் தலைவர்களை கலந்து கொள்கிறார்கள்.

இந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் முடிந்த பின்னர், எமானுவேல் மக்ரோன் இஸ்த்ரேஸ்d'Istres (Bouches-du-Rhône)  விமானப்படை தளத்துக்குச் சென்று ஆயுதப் படைகளுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்க உள்ளார். அந்த நேரத்தில், கிரீன்லாந்தில் நடைபெறும் ஒரு ஐரோப்பிய இராணுவ பயிற்சியின் பகுதியாக பிரெஞ்சு படைகள் அனுப்பப்படுவது குறித்தும் அவர் கருத்து தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்