Paristamil Navigation Paristamil advert login

ஜனாதிபதி மக்ரோனை விமானத்தில் அழைத்துவரும் விண்வெளி வீரர் - அரிதான நிகழ்வு!

ஜனாதிபதி மக்ரோனை விமானத்தில் அழைத்துவரும் விண்வெளி வீரர் - அரிதான நிகழ்வு!

14 தை 2026 புதன் 19:36 | பார்வைகள் : 2058


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை விண்வெளி வீரரான தோமா பெஸ்கே (Thomas Pesquet) அவர்கள் விமானத்தில் அழைத்துவர உள்ளார். இந்த அரிதான நிகழ்வு நாளை ஜனவரி 15, வியாழக்கிழமை இடம்பெற உள்ளது.

பொதுவாக ஜனாதிபதி பயணிக்கும் A330 MRTT விமானத்தை அதற்கென நியமிக்கப்பட்ட விமானியே செலுத்துவார். ஆனால் நாளைய தினம் ஜனாதிபதியின் விமானத்தை விண்வெளி வீரர் தோமா பெஸ்கே செலுத்தி, மார்செயின் தெற்கே உள்ள Istres நகரில் இருந்து ஓர்லி சர்வதேச விமானநிலையத்துக்கு அழைத்து வர உள்ளார்.

தோமா பெஸ்கே பிரெஞ்சு வான்படைக்கு ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட கேணல் தர அதிகாரியாவார்.

"எம்ஆர்டிடி விமானத்தை இயக்குவதற்குத் தேவையான அனைத்து தகுதிகளும் சான்றிதழ்களும் அவரிடம் உள்ளன." என எலிசே மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்