Paristamil Navigation Paristamil advert login

உலக ஒழுங்கை சிதைக்கும் அமெரிக்கா – இந்தியாவிற்கான ஈரான் தூதரகம்

உலக ஒழுங்கை சிதைக்கும் அமெரிக்கா – இந்தியாவிற்கான ஈரான் தூதரகம்

15 தை 2026 வியாழன் 10:30 | பார்வைகள் : 114


அமெரிக்கா உலகின் ஒழுங்கை சிதைக்கிறது என இந்தியாவிற்கான ஈரான் தூதரகம் கடுமையாக விமர்சித்துள்ளது. அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகள் மவுனமாக இருக்கக் கூடாது, இல்லையெனில் அதன் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என்றும் அறிக்கையில் எச்சரித்துள்ளது.  

அந்த அறிக்கையில், "அமெரிக்கா உலகின் ஒழுங்கை சிதைப்பதுடன், ஒரு தலைபட்சமாகவும் செயல்படுகிறது. அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து உலக நாடுகள் மவுனமாக இருக்கக்கூடாது, அதனால் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

மேலும், அமெரிக்காவின் நடவடிக்கைகள் நேரடியாக ஈரான் மட்டுமின்றி, உலகளாவிய அளவில் பல நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

வர்த்தக‌ விளம்பரங்கள்