Paristamil Navigation Paristamil advert login

வா வாத்தியார் படம் எப்படி இருக்கிறது?

வா வாத்தியார்  படம்  எப்படி  இருக்கிறது?

14 தை 2026 புதன் 15:10 | பார்வைகள் : 737


எம்ஜிஆரின் தீவிர ரசிகரான ராஜ்கிரண், எம்ஜிஆர் இறந்த சமயத்தில் பிறக்கும் தனது பேரனையும் எம் ஜி ஆர் ரசிகராகவே வளர்க்கிறார். ஆனால் அவனோ பணத்தாசையால் நம்பியார் மாதிரி வில்லத்தன குணத்துக்கு மாறுகிறான் வளர்ந்து பெரியவனாகி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகி, தவறான நபர்களுடன் கூட்டணி வைத்து பணத்துக்காக அனைத்து கெட்ட வேலைகளையும் செய்கிறார். அவர் உடலுக்குள் எம் ஜி ஆர் ஆன்மா புகுந்தால் என்ன நடக்கும் என்பதை பேண்டசி கலந்த காமெடி கதையாக சொல்லும் படம் வா வாத்தியார். 'சூது கவ்வும், காதலும் கடந்து போகும்' படங்களை இயக்கிய நலன் குமரசாமி இயக்கி இருக்கிறார்.


ராமு என்ற கெட்ட போலீஸ், எம் ஜி ஆர் ஆன்மா புகுந்ததால் 'ராமசந்திரன்' என இரண்டு மாறுபட்ட வேடத்தில் நடித்து இருக்கிறார் கார்த்தி. மாசிலா என்ற கற்பனை நகரத்தில் கதை நடக்கிறது.. அனைத்தும் கற்பனை என இயக்குனர் முதலில் சொல்வதால் எதிலும் லாஜிக் பார்க்க கூடாது போலும். கட்டம்போட்ட காக்கி உடையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வருகிறார் கார்த்தி. பல சீன்களில் அழகாக, பிட் இருக்கிறார். கொஞ்சம் காமெடி கலந்த பாடிலாங்வேஜில் கவர்கிறார். தனக்கே உரிய நக்கல் பேச்சில் சில இடங்களில் ரசிக்க வைக்கிறார். இடைவேளைக்குபின் பல வித எம் ஜி ஆர் கெட் அப்புக்கு மாறுகிறார். சிலருக்கு பிடிகலாம். சிலருக்கு பிடிக்காமல் போகலாம். அது கெட் அப் பிடித்து இருந்தால் உங்களுக்கு படம் ஓரளவு பிடிக்கும். சண்டை காட்சி, எம் ஜி ஆர் காட்சிகளில் கவர்கிறார்

பேயுடம் பேசுபவர் போன்ற கேரக்டரில் வரும் கிர்த்தி ஷெட்டியை காதலிக்கிறார். அது பெரிதாக செட்டாகவில்லை. அவர்களின் 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' சாங் மட்டும் ரசிக்க வைக்கிறது. குதிரையில் அவ்வப்போது எம் ஜி ஆர் மாதிரி வருவதும், கிளைமாக்ஸ் முந்திய அந்த நீளமான சண்டை காட்சியிலும் மிரட்டி இருக்கிறார். அந்நியன் பட மாதிரியான, இரண்டு கேரக்டராக மாறும் அந்த சீன் கார்த்திக்கு செட் ஆகவில்லை. கார்த்தி கேரக்டரை இன்னும் வலுவாக அமைத்து இருக்கலாம்.

கார்த்தி தாத்தாவாக எம் ஜி ஆர் ரசிகராக வரும் ராஜ்கிரண் படத்துக்கு பிளஸ். எம் ஜி ஆரை பற்றி அவர் பேசும் காட்சிகள் சூப்பர். வில்லனாக வரும் சத்யராஜ் சில டயலாக் பேசிவிட்டு போகிறார்.. அவர் மகளாக வரும் ஷில்பா மஞ்சுனாத் சில சீன்களில் வந்து போகிறார். பல படங்களில் கலக்கிய ரமேஷ் திலக் டயலாக் பேசாமல் படத்தை முடித்து வைக்கிறார்.

தமிழில் அறிமுக படம் என்றாலும், கிர்த்தி ஷெட்டி காஸ்ட்யூம், ஸ்டைல், அவர் கேரக்டர் இன்ட்ரஸ்டிங். சாங்கில் மிரட்டி இருக்கிறார். அவர் போர்ஷனை அதிகரித்து இருக்கலாம். அரசியல்வாதியாக வரும் நிழல்கள் ரவி, யார் கண்ணன் கேரக்டர் பல படங்களில் பார்த்தது. மற்ற போலீஸ் கேரக்டர்களும் அப்படியே. அதே சமயம் ஹேக்கர்கள், மஞ்சள் முகம் என்ற டீம் செயல்பாடுகள் ஈர்ப்பு ஏற்படுத்து இருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை லேசா தொட்டு இருக்கிறார்கள். அது புதுசு. ஆனந்த்ராஜ் கெட்அப் நல்லா இருக்கிறது. ஆனால் கேரக்டர் யார் இவர் என்ற தெளிவில்லாமல் இருக்கிறது.

நலன் படங்களில் காமெடி நல்லா இருக்கும். சீன் புதுசா இருக்கும். இதில் இரண்டும் மைனஸ். படத்தின் முக்கிய விஷயமான எம் ஜி ஆர் வரும் சீன்கள், கதையுடன் செட்டாகவில்லை. எம் ஜி ஆர் என்ற ஆளுமையை சரியாக பயன்படுத்தவில்லையோ என தோன்றுகிறது. எம் ஜி ஆர் கெட்அப் போட்டு, சண்டை போட்டால் எம் ஜி ஆர் ஆகி விட முடியுமா? அவர் தனித்துவத்தை பதிவு செய்து அசத்தி இருக்க வேண்டாமா? அவரின் வள்ளல் தன்மையை, பெண்களை கவரும் குணத்தை இன்னும் நிறைய, அழுத்தமாக பதிவு செய்து இருக்க வேண்டாமா?

ஜார்ஜ் ஒளிப்பதிவு ஓகே. ஆனாலும் நிறைய இடங்களில் டார்க் ஷேடு ஏனோ? சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை, பாடல்கள் படத்தை கமர்சியல் ஆக்கி இருக்கிறது. படத்தில் ஆங்காங்கே வரும் எம் ஜி ஆர் பாடல் நம்மை அறியாமல் பாட, தாளம் போட வைக்கின்றன. படத்தின் ஆரம்ப பிளாஷ்பேக் காட்சி டச்சிங். கிளைமாக்சில் அழுத்தம் இல்லை. இதில் இரண்டாவது பாகத்துக்கு அடி போட்டு இருக்கிறார்கள்.

ராமு என்ற கார்த்தி, ராமசந்திரன்(எம் ஜி ஆர்) ஆகி கெட்டதை அழிக்கிறார். வில்லன்களை பந்தாடுகிறார் என்ற அழகான கரு. ஆனால் சரியாக சொல்லாமல் தத்தளித்து இருக்கிறார் இயக்குனர். கார்த்தி கஷ்டப்பட்டு இருக்கிறார். அது வெளியில் தெரியவில்லை. படம் காமெடியாகவும் இல்லை, பேண்டசியும் குறைவு. பல சீன்கள் கதையுடன் ஒட்டவில்லை. நலன் படத்தில் காமெடி நல்லா இருக்கும்.. நல்லா சிரிக்கலாம் என்பதும் இதில் மிஸ்சிங். எம் ஜி ஆர் ரசிகர்களுக்கு அதிகம் பிடிக்க வாய்ப்பில்லை. கார்த்தி ரசிகர்கள் திருப்தி ஆகவும் வாய்ப்பு குறைவு.

🔥 இன்றைய சிறப்பு சலுகை

வர்த்தக‌ விளம்பரங்கள்