Paristamil Navigation Paristamil advert login

சுவிட்சர்லாந்தில் பனிக்கட்டிக்குள் சிக்கி இருந்த சிறுவன் மீட்பு

 சுவிட்சர்லாந்தில் பனிக்கட்டிக்குள் சிக்கி இருந்த சிறுவன் மீட்பு

14 தை 2026 புதன் 15:07 | பார்வைகள் : 352


சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விளையாடிக்கொண்டிருந்த ஒருவர், சற்று தொலைவில் பனிக்குள்ளிருந்து கை ஒன்று எட்டிப்பார்ப்பதைக் கண்டு திடுக்கிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்திலுள்ள Engelberg என்னுமிடத்தில், Matteo Zilla (37) என்பவர் பனிச்சறுக்கு விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது, சற்று தொலைவில் பனிக்குள்ளிருந்து ஒரு கை எட்டிப்பார்ப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அங்கு சென்று பார்க்க, பனிக்குள் பையன் ஒருவன் சிக்கியிருந்தது தெரியவந்துள்ளது.

உடனடியாக, அவனது முகத்தின் மேலிருந்த பனியை அகற்றி, அவனால் சுவாசிக்க முடிகிறதா எனக் கேட்டு அவன் சுவாசிப்பதை உறுதி செய்துகொண்டுள்ளார் Zilla. 
சிறிது நேரத்துக்குள் பனிச்சறுக்கு விளையாட வந்த மேலும் சிலரும் அங்கு வர, அனைவருமாக சேர்ந்து பனியை ஒதுக்கி அந்தப் பையனை மீட்டுள்ளார்கள். 

அந்தப் பையன் பனிச்சறுக்கு விளையாடும்போது, அங்கிருந்த புதர்களைக் கவனிக்காமல் தடுக்கி விழுந்து, பனிக்குள் புதைந்துள்ளான்.

அந்த சம்பவம் குறித்துக் கேட்டால், எனது எண்ண உணர்வுகள் ஒரு பக்கம் இருக்க, அவையெல்லாம் எனக்கு முக்கியமில்லை, ஒரு உயிரைக் காப்பாற்றிவிட்டோம் என்ற விடயம்தான் முக்கியம் என்கிறார் Zilla.

வர்த்தக‌ விளம்பரங்கள்