Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் கண்டனம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் கண்டனம்!

14 தை 2026 புதன் 13:49 | பார்வைகள் : 233


ஈரான் போராட்டக்காரர்களை தூக்கிலிட்டால், அதற்கு எதிராக அமெரிக்கா மிகக் கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு ஈரானின் ஐநா தூதர் அமீர் சயீத் இரவானி (Amir Saeid Iravani) கண்டனம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியாகியுள்ளன.

ஈரானின் ஐநா தூதர் அமீர் சயீத் இரவானி குறிப்பிடுகையில், 
உதவி வந்து கொண்டிருக்கிறது”  என கூறி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வன்முறையைத் தூண்டுகிறார்.  

டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு கூறுவது நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயலாகும். அவர் அரசாங்கத்தைச் சீர்குலைக்க முயல்கிறார் என ஈரானின் ஐநா தூதர் அமீர் சயீத் இரவானி குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்