வெனிசுவெலா சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்கர்கள் விடுவிப்பு
14 தை 2026 புதன் 13:42 | பார்வைகள் : 234
வெனிசுவெலாவில் சிறை பிடிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
வெனிசுவெலா நாட்டின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள எண்ணற்ற அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டிருக்கும் இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இது, வெனிசுவெலாவின் இடைக்கால அதிகாரிகள் சரியான திசையை நோக்கி எடுத்த முக்கிய முடிவு என்றும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெனிசுவெலாவில் உள்ள மனித உரிமைகள் அமைப்பான போரோ பீனல் வெளியிட்ட செய்தியறிக்கையில்,
அரசியல் காரணங்களுக்காக சிறை பிடிக்கப்பட்ட 56 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும், வெனிசுவெலா அரசு 400 பேரை விடுவித்திருக்கிறோம் என தெரிவித்துள்ளது. ஆனால், விடுவிப்புக்கான சான்றுகளையோ அல்லது எப்போது விடுவித்தது என்பது பற்றிய தகவலையோ வெளியிடவில்லை. விடுதலை செய்யப்பட்டவர்களின் அடையாளமும் வெளியாகவில்லை.
இதனால் அவர்கள் அரசியல் காரணங்களுக்காக அல்லது பிற காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களா? என்ற விபரம் தெரியவில்லை. கடந்த ஜூலையில் வெனிசுவெலா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 10 அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்படுகிறது.
வெனிசுவெலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்க இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்ட பின்னர், வெனிசுவெலாவில் சிறை பிடிக்கப்பட்ட கைதிகளின் விடுவிப்பு விடயங்கள் அதிக கவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan