Paristamil Navigation Paristamil advert login

பொங்கல் ரேஸில் இருந்து திரெளபதி 2 விலக காரணம் என்ன?

 பொங்கல் ரேஸில் இருந்து  திரெளபதி 2 விலக காரணம் என்ன?

14 தை 2026 புதன் 08:44 | பார்வைகள் : 219


2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி ஆகிய இரண்டு படங்கள் தான் ரிலீஸ் ஆக இருந்தன. ஆனால் கடைசி நேரத்தில் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் அப்படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியது. ஜனநாயகன் போன்ற பெரிய படம் திடீரென விலகியதால், அடுத்தடுத்து சில படங்கள் பொங்கல் ரேஸில் போட்டிபோட்டு குதித்ததன. அப்படி ஜனநாயகன் விலகலுக்கு பின்னர் பொங்கல் வெளியீட்டை உறுதிசெய்த திரைப்படம் தான் திரெளபதி 2.

மோகன் ஜி இயக்கத்தில் 2020-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் திரெளபதி. நாடகக் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் இரண்டாம் பாகம் ஜனவரி 15-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்படத்தில் ரிச்சர்டு ரிஷி, நட்டி நட்ராஜ், வேலராம மூர்த்தி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. ரிலீசுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில், திடீரென திரெளபதி 2 படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைப்பதாக படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

அந்த அறிக்கையில், திரையரங்க உரிமையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த முடிவை எடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ள படக்குழு, திரெளபதி 2 திரைப்படத்தின் புது ரிலீஸ் தேதியையும் அறிவித்து இருக்கிறது. அதன்படி அப்படம் வருகிற ஜனவரி 23-ந் தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 23ஆம் தேதி வெளியாகும் என அறிவித்து உள்ளனர். இந்த முடிவை பெரிய மனதுடன் ஏற்று எப்போதும் போல அன்பையும் ஆதரவையும் தருமாறு படக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

திரெளபதி 2 படம் பொங்கல் ரேஸில் விலகினாலும் இந்த ஆண்டு பொங்கலுக்கு கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கி உள்ளார். இப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. இதுதவிர புதுமுகங்கள் நடித்த ஜாக்கி திரைப்படமும் இன்று திரைக்கு வந்துள்ளது. மேலும் ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் நாளை பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்