Paristamil Navigation Paristamil advert login

RSA, APL மற்றும் குடும்ப உதவித்தொகைகள் இடைநிறுத்தம்!!

RSA, APL மற்றும் குடும்ப உதவித்தொகைகள் இடைநிறுத்தம்!!

14 தை 2026 புதன் 07:50 | பார்வைகள் : 1430


பேரணிகள் அல்லது போராட்டங்களின் போது வன்முறையில் ஈடுபட்டதாக குற்றவாளிகளாக அறிவிக்கப்படும் நபர்களின் சமூக நல உதவிகளை தற்காலிகமாக இடைநிறுத்தும் சட்ட முன்மொழிவை குடியரசுக் கட்சி (Les Républicains) முன்வைத்துள்ளது. 

இந்த முன்மொழிவு, தேசிய சட்டமன்றத்தின் சட்டக் குழுவில் ஆய்வு செய்யப்படுகிறது. சமீபத்தில் PSG அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நடந்த கடும் கலவரங்கள் இந்த நடவடிக்கைக்கான முக்கிய காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்டம், «கலவரக்காரன் செலுத்த வேண்டும்» என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் RSA, APL, குடும்ப உதவித் தொகைகள் மட்டுமின்றி, வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் MaPrimeRénov, கல்வி உதவித்தொகை, இடமாற்ற உதவி போன்ற அனைத்து அரசு உதவிகளும் இடைநிறுத்தப்படலாம். 

வன்முறையில் ஈடுபடுவோருக்கு உரிமைகளுடன் சேர்ந்து கடமைகளும் உள்ளன என்பதைக் குறிப்பதே இதன் நோக்கம். இருப்பினும், இந்த இடைநிறுத்தம் நிரந்தரமாக இருக்காது. அரசியலமைப்பின் விகிதாசாரக் கோட்பாட்டை மதித்து, அதிகபட்சமாக ஒரு ஆண்டுவரை மட்டுமே சமூக உதவிகள் நிறுத்தப்படும். குற்றவாளிகளை முழுமையாக சமூகத்திலிருந்து விலக்குவது அல்ல, வன்முறைக்கு எதிரான ஒருங்கிணைந்த மற்றும் பொருத்தமான பதிலை வழங்குவதே இந்த சட்ட முன்மொழிவின் நோக்கமாகும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்