Paristamil Navigation Paristamil advert login

விவசாயிகள் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி! - அவசரசட்டம் ஒன்றை நிறைவேற்றுவதாக பிரதமர் உறுதி!!

விவசாயிகள் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி! - அவசரசட்டம் ஒன்றை நிறைவேற்றுவதாக பிரதமர் உறுதி!!

13 தை 2026 செவ்வாய் 18:23 | பார்வைகள் : 772


விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கோடு, அவசர அரசியல் சட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு பிரதமர் Sébastien Lecornu உறுதியளித்துள்ளார்.

ஐரோப்பிய மற்றும் மெர்கசூர் வர்த்தக ஒப்பந்தகத்தினைக் கண்டித்து விவசாயிகள் பெருமளவில் வீதி முடக்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று செவ்வாய்க்கிழமை அவர்கள் பரிசில் புறநகரங்களை முற்றுகையிட்டிருந்தனர். பாராளுமன்றத்தின் முன்பாக தொன் கணக்கில் எடையுள்ள உருளைக்கிழங்குகளைக் கொட்டி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

இந்நிலையில், விவசாயிகளின் தேவையை அறிந்து அவர்களுக்கு தேவையானவற்றை வழங்குவதற்காக பாராளுமன்றத்தில் அவசர அரசியல் சட்டம் ஒன்றை உருவக்க உள்ளதாக அவர் அறிவித்தார்.

விவசாய அமைச்சர் Annie Genevard உடன் உரையாடியிருந்த பிரதமர் அதன் பின்னர் இந்த தகவலை அறிவித்தார். இந்த கோடை காலத்துக்குள் அவர்களது தேவைகள் நிறைவேற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்