Paristamil Navigation Paristamil advert login

பரிசில் பிறந்த பிள்ளைகளுக்கு - அதிகம் சூட்டப்பட்ட பெயர் என்ன தெரியுமா?!

பரிசில் பிறந்த பிள்ளைகளுக்கு - அதிகம் சூட்டப்பட்ட பெயர் என்ன தெரியுமா?!

13 தை 2026 செவ்வாய் 17:00 | பார்வைகள் : 1041


கடந்த 2025 ஆம் ஆண்டில் பரிசில் பிறந்த பிள்ளைகளுக்கு அதிகமான சூட்டப்பட்ட பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் பெண் பிள்ளைகளுக்கு அதிகமாக Alma எனவும், ஆண் பிள்ளைகளுக்கு Gabriel எனவும் சூட்டப்பட்டுள்ளது. இரண்டுமே பிரெஞ்சு பாரம்பரிய பெயர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சென்ற ஆண்டில் பரிசில் தோராயமான 20,000 பிள்ளைகள் பிறந்துள்ளதாக பரிசியல் சுட்டிக்காட்டியுள்ளது. அதன் துல்லியமான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. அவர்களில் 289 ஆண் பிள்ளைகளுக்கு Gabriel என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர் Raphael (221) Louis (205) Adam (205) Noah (190) Leon (174) போன்ற பெயர்கள் உள்ளன.

அதேவேளை, பெண் பிள்ளைகளின் பக்கத்தில் Alma எனும் பெயரை 174 பிள்ளைகளுக்கு சூட்டியுள்ளன. அதை தொடர்ந்து Louise (170) Olivia (153) Sofia (132) Iris (131) Gabrielle (122) Adele (122) போன்ற பெயர்கள் உள்ளன.

முந்தைய வருடங்களில் சூட்டப்பட்ட பெயர் பட்டியல்களே சென்ற 2025 ஆம் ஆண்டிலும் காணக்கூடியதாக உள்ளது. பரிசில் வசிக்கும் இளம் தம்பதிகள் தங்களது பாரம்பரிய பெயர்களையே தொடர்ந்தும் விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.

🔥 இன்றைய சிறப்பு சலுகை

வர்த்தக‌ விளம்பரங்கள்