Paristamil Navigation Paristamil advert login

பிக் பாஸ் வெற்றிக்கோப்பையை வெல்லப்போவது இவரா ?

பிக் பாஸ்  வெற்றிக்கோப்பையை  வெல்லப்போவது இவரா  ?

13 தை 2026 செவ்வாய் 13:39 | பார்வைகள் : 270


பிக்பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதன்முறையாக, எந்தவொரு பின்புலமும் இன்றி ஒரு சாமானிய பெண்ணாக நுழைந்த திவ்யா கணேஷ் தற்போது டைட்டில் வின்னர் ரேஸில் முன்னிலையில் இருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவுகளில் திவ்யா கணேஷ் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருவது, ஒரு 'காமன் மேன்' பிரதிநிதித்துவத்திற்கு மக்கள் அளிக்கும் மிகப்பெரிய ஆதரவாக பார்க்கப்படுகிறது.

எந்தவொரு சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் அல்லது என்.ஆர்.ஐ ஆதரவு இன்றி, தனது எதார்த்தமான குணத்தால் லட்சக்கணக்கான ரசிகர்களை அவர் கவர்ந்துள்ளார். குறிப்பாக, சமூக வலைதளங்களில் பெண் தொகுப்பாளர்கள் மற்றும் நடுநிலையான ரசிகர்கள் திவ்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவது அவருக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது.

பிக்பாஸ் வரலாற்றில் செல்வாக்கு மிக்கவர்களை தாண்டி, ஒரு சாமானியப் பெண் வெற்றிக்கோப்பையை வென்று சாதனை படைப்பாரா என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். சாமானிய ரசிகர்களின் சக்தியை நிரூபிக்க இதுவே சரியான தருணம் என திவ்யாவின் ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்