Paristamil Navigation Paristamil advert login

மந்தமாக துடுப்பாடியதால் வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் வீரர்

மந்தமாக துடுப்பாடியதால் வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் வீரர்

13 தை 2026 செவ்வாய் 10:51 | பார்வைகள் : 117


பிக் பாஷ் லீக் போட்டியில் மொஹம்மது ரிஸ்வான் மந்தமாக துடுப்பாடிய பிறகு ரிட்டயர்டு அவுட் செய்யப்பட்டார். 

12.01.2026 நடந்த BBL 33வது போட்டியில் சிட்னி தண்டர் மற்றும் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணிகள் மோதின. 

முதலில் ஆடிய மெல்போர்ன் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ஓட்டங்கள் குவித்தது. 

ஹஸன் கான் 46 (31) ஓட்டங்கள் விளாசினார். பின்னர் சிட்னி தண்டர் அணி களமிறங்கியபோது மழை குறுக்கிட்டது.

இதனால் 16 ஓவர்களில் 140 ஓட்டங்கள் என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. சிட்னி தண்டர் அணி 15.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ஓட்டங்கள் எடுத்திருந்து வெற்றி பெற்றது. கிறிஸ் கிரீன் 13 பந்துகளில் 34 ஓட்டங்கள் விளாசினார்.

இப்போட்டியில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணியில் மொஹம்மது ரிஸ்வான் (Mohammad Rizwan) மந்தமாக துடுப்பாடினார். 

அவர் 23 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 26 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேற்றப்பட்டார். 

இதன்மூலம் காயம் ஏதுமின்றி 'ரிட்டயர்டு அவுட்' செய்யப்பட்ட BBL வரலாற்றில் மூன்றாவது வீரர் இவர் மட்டுமே.

சமீபத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான தண்டர் அணியின் போட்டியில், நிக் மேடின்சன் இதேபோல் 'ரிட்டயர்டு அவுட்' செய்யப்பட்டதைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் இந்த உத்தி இப்போது பரவலாகி வருகிறது.

ரிட்டயர்டு அவுட் மூலம் நடப்பு தொடரில் மொஹம்மது ரிஸ்வானின் கடினமான சீஸன் தொடர்ந்தது.  

வர்த்தக‌ விளம்பரங்கள்