Paristamil Navigation Paristamil advert login

உலகின் சில நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் - கனடா எச்சரிக்கை

உலகின் சில நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் -   கனடா  எச்சரிக்கை

13 தை 2026 செவ்வாய் 05:23 | பார்வைகள் : 256


கனடா அரசு, உலகின் சில நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Level-4 “Avoid All Travel” Advisory எனப்படும் மிக உயர்ந்த அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதால், கனடியர்கள் அந்த நாடுகளுக்கு செல்லாமல் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அரசின் அறிவிப்பில், அரசியல் குழப்பம், போராட்டங்கள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள், மற்றும் பாதுகாப்பு சவால்கள் காரணமாக இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Level-4 Advisory என்பது கனடா வெளியிடும் மிக உயர்ந்த அபாய எச்சரிக்கை ஆகும்.
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கு செல்லும் கனடியர்கள், உயிர் அபாயம், சட்ட சிக்கல்கள், மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் சந்திக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அவசர சூழ்நிலைகளில் கனடா அரசு உதவி செய்ய இயலாது என்பதையும் எச்சரிக்கை குறிப்பில் தெரிவித்துள்ளது.

ஈரான்
வெனிசுலா 
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு
தென் சூடான்
யேமன் இந்த நாடுகள் “Avoid All Travel” பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், சிரியா, சூடான், ரஷ்யா, நைஜர், மாலி, லிபியா, ஈராக், ஆப்கானிஸ்தான், உக்ரைன், ஹைட்டி, சோமாலியா, மியான்மார், வட கொரியா போன்ற நாடுகளும் Level-4 Advisory பட்டியலில் உள்ளன.

அதிக அபாயம் இல்லாதபோதும், நேபாளம், எத்தியோப்பியா, நைஜீரியா, லெபனான் போன்ற நாடுகளுக்கு “Avoid Non-Essential Travel” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா - கனடா அரசு இந்தியாவை “High Degree of Caution” பட்டியலில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், கனடா அரசு, தனது குடிமக்கள் பயண திட்டங்களை மறுபரிசீலனை செய்யவும், பாதுகாப்பான நாடுகளை தேர்வு செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்