இலங்கையில் பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு
9 மார்கழி 2025 செவ்வாய் 14:08 | பார்வைகள் : 617
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் 16 ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் உள்ள 10,076 அதற்கமைய, 9929 பாடசாலைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அனர்த்தங்களுக்கு அதிகளவில் முகங்கொடுத்துள்ள வலையங்களை உள்ளடக்கிய 147 பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய ஊவா மாகாணத்தில் 26 பாடசாலைகளும், வடமேல் மாகாணத்தில் 6 பாடசாலைகளும், மத்திய மாகாணத்தில் 115 பாடசாலைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படாது எனவும் அறிவித்தார்.
மேலும், டிசம்பர் 16ஆம் திகதி ஆரம்பமாகும் அனைத்துப் பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விச்சாரா ஊழியர்கள் டிசம்பர் 15ஆம் திகதி சேவைக்குச் சமூகமளிக்க வேண்டும் என்றும், அனர்த்த நிலைமையை எதிர்கொண்ட பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கல்விசார், கல்விசாரா ஊழியர்களின் சீருடை தொடர்பில் நெகிழ்வுத்தன்மை பின்பற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
மேலும், 2025ஆம் ஆண்டின் மூன்றாம் தவணைக் காலத்தின் இரண்டாம் கட்டம் 2025.12.16ஆம் திகதி முதல் 2025.12.22ஆம் திகதி வரை, கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் 2025.12.29ஆம் திகதி முதல் 2025.12.31ஆம் திகதி வரை, முஸ்லிம் பாடசாலைகள் 2026.01.02ஆம் திகதி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடாத்தப்படாத ஏனைய பாடசாலைகள் 2026 ஜனவரி 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும், அது தொடர்பான மேலதிக அறிவிப்புகள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிடுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி 05ஆம் திகதி ஆரம்பிக்கப்படும், என்றும் சாதாரண தரப் பரீட்சை திட்டமிட்டபடி பெப்ரவரி மாதம் நடைபெறும் அறிவிக்கப்பட்டது.
எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாத பாடசாலைகள் தொடர்பான விபரங்களை கீழே பார்வையிட முடியும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் செல்வரத்தினம் இராசம்மா
Roissy en brie (பிரான்ஸ்), யாழ்ப்பாணம் வண்வடமேற்கு
வயது : 87
இறப்பு : 12 Jan 2026
-
125






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan