பல திசைகளில் உக்ரைனை சுற்றி வளைத்த ரஷ்யா-சுட்டு வீழ்த்தப்பட்ட 131 ட்ரோன்கள்
8 மார்கழி 2025 திங்கள் 17:45 | பார்வைகள் : 225
ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்து இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை வெளியான அறிவிப்பின் படி, உக்ரைனிய நகரங்களை குறிவைத்து இரவில் ரஷ்யா நடத்திய பரந்த அளவிலான வான்வழித் தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு இருப்பதாக உக்ரைன் ஆயுதப்படை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் மொத்தம் 131 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக உக்ரைனிய படைகள் தெரிவித்துள்ளன.
ரஷ்யாவினால் ஏவப்பட்ட ஆளில்லா விமானங்களில், ஷாஹெட், கெர்பர் தாக்குதல் UAV கள் மற்றும் பிற வகை ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், மொத்தமாக 149 வான்வழி தாக்குதல் ஆயுதங்களை ரஷ்யா ஏவியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய ட்ரோன்கள், ப்ரையன்ஸ்க், ஓரேல், குர்ஸ்க், அக்தார்ஸ்க், மில்லரோவோ, டொனெட்ஸ்க் மற்றும் செளடா ஆகிய பல திசைகளில் இருந்து தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 11 வெவ்வேறு இடங்களில் 16 ட்ரோன்களின் தாக்குதல்கள் பதிவாகி இருப்பதாக உக்ரைன் விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan