இந்தியாவிற்கான கட்டணத்தை அறிவித்த ஸ்டார்லிங்க் - மாதம் எவ்வளவு தெரியுமா?
8 மார்கழி 2025 திங்கள் 17:45 | பார்வைகள் : 138
இந்தியாவில் இணைய சேவைக்கான கட்டண விவரத்தை ஸ்டார்லிங்க் அறிவித்துள்ளது.
பிரபல தொழிலதிபரான எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இணைய சேவையை வழங்கி வருகிறது.
இந்தியாவில் விரைவில் தங்களது இணைய சேவையை ஸ்டார்லிங்க் தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்தியாவிற்கான கட்டண விவரங்களை ஸ்டார்லிங்க் வெளியிட்டுள்ளது.
இதன்படி, மாத கட்டணம் ரூ.8,600 எனவும், அதற்கான கருவியின் விலை ரூ.34,000 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரம்பற்ற டேட்டா வழங்குவதாகவும், 99.99% க்கும் அதிகமான இயக்க நேரம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், அனைத்து விதமான வானிலை நிலைகளின் போதும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 30 நாட்கள் சோதனை காலம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 30 நாட்களில் பயனர்களுக்கு திருப்தி இல்லையென்றால் முழு கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
இந்தியாவில், ஜியோ, ஏர்டெல் போன்ற இந்திய நிறுவனங்களுக்கு ஸ்டார்லிங்க் கடுமையான போட்டியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7,000 அதிகமான செயற்கைகோள்களை விண்ணில் ஏவியுள்ள எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ், உலகிலேயே அதிக செயற்கைகோள்கள் கொண்ட தனியார் நிறுவனம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
ஸ்டார்லிங்க் நிறுவனம் அதன் மூலம் ஸ்டார்லிங்க் இணைய சேவையை வழங்கி வருகிறது. உலகளவில் 5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் ஸ்டார்லிங்க் இணையசேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan