நியூயார்க் நகரில் 7 மாடி உயர பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம்
8 மார்கழி 2025 திங்கள் 05:22 | பார்வைகள் : 647
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட மக்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர்.
தங்கள் வீடுகளில் கிறிஸ்துமஸ் மரம், வண்ண விளக்குகள், இயேசு கிறிஸ்து பிறந்த வரலாற்றை எடுத்துரைக்கும் வகையிலான குடில்கள், உருவ பொம்மைகளை வைத்து கிறிஸ்தவ மக்கள் தங்கள் வீடுகளை அலங்காரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரம் தற்போது விழாக்கால கொண்டாட்டங்களால் களைகட்டியுள்ளது.
குறிப்பாக நியூயார்க்கின் ராக்பெல்லர் சென்டர் பகுதியில் சுமார் 7 மாடி உயரம் கொண்ட பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டுள்ளது.
அந்த மரத்தின் மீது சுமார் 50 ஆயிரம் வண்ண மின்விளக்குகள் ஜொலிக்கின்றன. அதன் உச்சியில் பிரகாசமாக ஒளிரக்கூடிய ஒற்றை நட்சத்திரம் வைக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan