Paristamil Navigation Paristamil advert login

சிக்ஸர் அடித்து 80 பந்துகளில் சதம்! எதிரணி வீரரை கைதட்டி பாராட்டிய கோஹ்லி

சிக்ஸர் அடித்து 80 பந்துகளில் சதம்! எதிரணி வீரரை கைதட்டி பாராட்டிய கோஹ்லி

6 மார்கழி 2025 சனி 12:54 | பார்வைகள் : 119


இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் குயிண்டன் டி காக் 23வது சதத்தினை பதிவு செய்தார்.

 

விசாகப்பட்டினத்தில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.

 

இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக் சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார்.

 

79 பந்துகளில் 94 ஓட்டங்களில் இருந்த டி காக் சிக்ஸர் அடித்து சதத்தை பூர்த்தி செய்தார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 23வது சதம் ஆகும்.

 

டி காக்கின் ஆட்டத்தைப் பார்த்து வியந்த விராட் கோஹ்லி (Virat Kohli), அவர் சதம் அடித்ததை கைதட்டி பாராட்டினார்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்