இந்தியாவில் உயர் இரத்த அழுத்த எச்சரிக்கை வசதியுடன் Apple Watch அறிமுகம்
6 மார்கழி 2025 சனி 06:18 | பார்வைகள் : 635
Apple நிறுவனம் இந்தியாவில் தனது Apple Watch-க்கான புதிய Hypertension (உயர் இரத்த அழுத்தம்) எச்சரிக்கை வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகளவில் 2024-ஆம் ஆண்டில் 1.4 பில்லியன் மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என WHO தெரிவித்துள்ளது.
இதனால் ஆண்டுதோறும் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
Apple Watch-ன் optical heart sensor மூலம் இதயத் துடிப்புகளுக்கு இரத்தக் குழாய்கள் எப்படி பதிலளிக்கின்றன என்பதை 30 நாட்கள் வரை கண்காணிக்கிறது.
தொடர்ந்து ஹைப்பர்டென்ஷன் அறிகுறிகள் கண்டறியப்பட்டால், பயனருக்கு அறிவிப்பு வழங்கப்படும். இதற்காக எந்தவிதமான cuff calibration தேவையில்லை.
பயனர்கள் எச்சரிக்கை பெற்றால், 7 நாட்கள் வரை மூன்றாம் தரப்பு blood pressure cuff மூலம் அளவீடுகளை பதிவு செய்து, மருத்துவரை அணுகுவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.
அனைத்து தரவுகளும் iPhone-ன் Health App-ல் சேமிக்கப்பட்டு, PDF வடிவில் மருத்துவருக்கு அனுப்ப முடியும்.
இந்த அம்சம் 1,00,000 பேரை உள்ளடக்கிய பல்வேறு ஆய்வுகளின் தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு, 2,000 பேரை கொண்ட மருத்துவ ஆய்வில் சோதிக்கப்பட்டது.
Apple, இந்த வசதி மூலம் முதல் ஆண்டிலேயே 10 லட்சம் பேர் வரை கண்டறியப்படாத ஹைப்பர்டென்ஷன் நோயாளிகளை அடையாளம் காண முடியும் என எதிர்பார்க்கிறது.
இந்த வசதி Apple Watch Series 9 மற்றும் அதற்கு பிந்தைய மொடல்களிலும், Apple Watch Ultra 2 மற்றும் அதற்கு பிந்தைய மொடல்களிலும் கிடைக்கும்.
ஆனால், 22 வயதிற்குக் குறைவானவர்கள், ஏற்கனவே ஹைப்பர்டென்ஷன் நோயாளிகள், மற்றும் கர்ப்பிணிகள் இந்த அம்சத்தை பயன்படுத்தக்கூடாது என நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan