அஜித்தின் கார் ரேஸ் பயணத்தை ஆவணப்படமாக்குகிறாரா ஏ.எல்.விஜய்?
5 மார்கழி 2025 வெள்ளி 15:12 | பார்வைகள் : 687
2007ம் ஆண்டில் அஜித், திரிஷா நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கிய படம் கிரீடம். இந்த படத்தில் தான் அவர் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு அஜித் குமாரை வைத்து அவர் படம் இயக்கவில்லை. அஜித் தற்போது பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.
சமீபத்தில் 2025ம் ஆண்டுக்கான ஜென்டில்மேன் டிரைவர் விருது பெற்றார். இந்த நிலையில் தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் ரேஸில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நேரத்தில் அஜித்தின் கார் ரேஸ் பயணங்களை தொகுத்து ஒரு ஆவண படத்தை உருவாக்கி வருகிறார் ஏ.எல்.விஜய். அஜித்தின் ஹைலைட்டான கார் ரேஸ் காட்சிகள் இடம்பெறும் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan