Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் 22 மாவட்டங்கள் தேசிய அனர்த்த பிரதேசங்களாக பிரகடணம்!

இலங்கையில் 22 மாவட்டங்கள் தேசிய அனர்த்த பிரதேசங்களாக பிரகடணம்!

3 மார்கழி 2025 புதன் 15:43 | பார்வைகள் : 259


டிட்வா புயலால் நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து, அரசாங்கம் தேசிய அனர்த்தத்திற்கு உள்ளான பிரதேசங்களை அறிவித்து வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மரணப் பதிவுச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் XI ஆம் பகுதியின் 9 ஆம் பிரிவின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

‘டித்வா’ சூறாவளியின் தாக்கத்தினால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட 22 நிர்வாக மாவட்டங்கள் ‘தேசிய அனர்த்தத்திற்கு உள்ளான பிரதேசங்களாக’ப் பெயரிடப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு,

22 நிர்வாக மாவட்டங்கள்
கண்டி நிர்வாக மாவட்டம்

நுவரெலியா நிர்வாக மாவட்டம்

பதுளை நிர்வாக மாவட்டம்

குருநாகல் நிர்வாக மாவட்டம்

மாத்தளை நிர்வாக மாவட்டம்

கேகாலை நிர்வாக மாவட்டம்

கம்பஹா நிர்வாக மாவட்டம்

முல்லைத்தீவு நிர்வாக மாவட்டம்

அநுராதபுரம் நிர்வாக மாவட்டம்

கொழும்பு நிர்வாக மாவட்டம்

யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்டம்

பொலன்னறுவை நிர்வாக மாவட்டம்

மன்னார் நிர்வாக மாவட்டம்

புத்தளம் நிர்வாக மாவட்டம்

இரத்தினபுரி நிர்வாக மாவட்டம்

மொனராகலை நிர்வாக மாவட்டம்

மட்டக்களப்பு நிர்வாக மாவட்டம்

அம்பாறை நிர்வாக மாவட்டம்

திருகோணமலை நிர்வாக மாவட்டம்

கிளிநொச்சி நிர்வாக மாவட்டம்

வவுனியா நிர்வாக மாவட்டம்

களுத்துறை நிர்வாக மாவட்டம்

வர்த்தக‌ விளம்பரங்கள்