‘வேள்பாரி’... படப்பிடிப்பு எப்போது தெரியுமா?
3 மார்கழி 2025 புதன் 14:40 | பார்வைகள் : 275
பிரமாண்டமாக உருவாக உள்ள வேள்பாரி திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கும் என கூறப்படுகிறது.ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘இந்தியன் 2’ திரைப்படம் படு தோல்வியை சந்தித்து. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ படமும் தோல்வியை தழுவியது. இரண்டு தொடர் தோல்வி படங்களுக்குப் பிறகு ஷங்கர் கம்பேக் கொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் படம் ‘வேள்பாரி’.எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதி பரவலான வாசகர் பரப்பை ஈர்த்த ‘வேள்பாரி’ நாவலை படமாக்க இருப்பதாக இயக்குநர் பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தின் பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் யார் நடிக்க இருக்கிறார்கள்? யார் தயாரிக்க போகிறார்கள்? என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
‘வேள்பாரி’ படத்தின் படப்பிடிப்புக்கு முன்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே ‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் இன்னும் முழுமை பெறாமல் இருக்கின்றன. இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகுமா? அல்லது திரையரங்குகளில் வெளியாகுமா? ஷங்கர் அடுத்து அந்தப் படத்தை இயக்குவாரா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
கூகு






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan