96 பட இயக்குனர் பிரேம்குமார் நானியுடன் கைகோர்க்கிறாரா?
2 மார்கழி 2025 செவ்வாய் 15:20 | பார்வைகள் : 234
‘96’ மற்றும் ‘மெய்யழகன்’ போன்ற மனதைத் தொட்ட வாழ்வியல் படங்களை இயக்கியவர் பிரேம் குமார். இவரது அடுத்த படத்தில் நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது; ஆனால் அந்தத் திட்டம் பின்னர் தள்ளிப் போகியது. அதனைத் தொடர்ந்து மலையாள நடிகர் பஹத் பாசிலை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும், அதனை அவர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது தெலுங்கு நடிகர் நானியை சந்தித்து பிரேம் குமார் ஒரு புதிய கதையை விவரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்தக் கதை நானிக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும், தற்போது நடித்து வரும் படங்களை முடித்தவுடன், பிரேம் குமார் இயக்கும் அந்தப் படத்தில் நடிப்பதாக அவர் உறுதி அளித்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan