சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை: மக்கள் அவதி
2 மார்கழி 2025 செவ்வாய் 05:34 | பார்வைகள் : 101
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
டிட்வா' புயல் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததால், சென்னையில் இயல்பு வாழ்க்கை நேற்று முடங்கியது. சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம் வீடு, கோவில் உள்ளிட்ட பகுதிகளை சூழ்ந்தது. சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் நுங்கம்பாக்கம், கிண்டி, ஆலந்தூர், கோடம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. சென்னையில் இருந்து 50 கி.மீ., தொலைவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan