Paristamil Navigation Paristamil advert login

டிசம்பர் மாற்றங்கள் : கிறிஸ்துமஸ் போணஸ், வரி, உதவிகள், Parcoursup...

டிசம்பர் மாற்றங்கள் : கிறிஸ்துமஸ் போணஸ், வரி, உதவிகள், Parcoursup...

1 மார்கழி 2025 திங்கள் 20:57 | பார்வைகள் : 1056


டிசம்பர் 2025 முதல் பல புதிய மாற்றங்கள் அமுலுக்கு வருகின்றன. 

  1. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு டிசம்பர் 16 முதல் கிறிஸ்துமஸ் போணஸ் (Prime de Noël) வழங்கப்படும். 
  2. சக்கர நாற்காலிகளுக்கு (Les fauteuils roulants) Assurance maladie மூலம் 100% பணம் திரும்ப வழங்கப்படும் (Remboursement), இதற்கு மருத்துவர் அல்லது தொழில் சிகிச்சையாளர் (ergothérapeute) பரிந்துரை அவசியம். 
  3. மாற்று காவலில் இருக்கும் குழந்தைகளுக்காக, Complément de libre choix du mode de garde (CMG) இப்போது சில நிபந்தனைகளின் கீழ் இரண்டு பெற்றோருக்கும் வழங்கப்படும். ஏற்கனவே CMG பெறும் பெற்றோர் எதையும் செய்ய வேண்டியதில்லை; மற்றொரு பெற்றோர் தனது உரிமையைத் திறக்க Caf-இல் விண்ணப்பிக்க வேண்டும். இந்த உதவி 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அங்கீகாரம் பெற்ற உதவி நபர் மூலம் அல்லது வீட்டிலேயே கவனிப்பவர்களுக்குப் பொருந்தும்.
  4. உயர் கல்வியின் முதல் ஆண்டுக்கான முன்னோட்ட சேர்க்கை தளம் Parcoursup, டிசம்பர் 17, 2025 அன்று திறக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு (2026) கிடைக்கும் படிப்புகளை மாணவர்கள் பார்த்தறிந்து, ஜனவரியில் தொடங்கும் பதிவு செயல்முறைக்கு முன்னெச்சரிக்கையாக தயாராகலாம்.
  5. வரி குறைப்பிற்காக, வீட்டில் உதவி, குழந்தை பராமரிப்பு, நன்கொடைகள் போன்றவற்றிற்கு 2024 ஆம் ஆண்டின் செலவின் அடிப்படையில் 60% முன்பணம் தானாக ஜனவரி 2026-இல் வழங்கப்படும்; ஆனால் 2025 செலவுகள் குறைவாக இருந்தால், 2026 கோடையில் நீங்கள் அதிகமாகப் பெற்ற தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கலாம். இதைக் தவிர்க்க, impots.gouv.fr தளத்தின் தனிப்பட்ட பகுதியிலிருந்து டிசம்பர் 11, 2025 வரை முன்பணத்தை மாற்றவோ, ரத்துசெய்யவோ முடியும்.
  6. நீங்கள் இரண்டாம் நிலை வீட்டின் உரிமையாளர் என்றால், டிசம்பர் 20க்குள் ஆன்லைனில்Taxe habitation வரியைச் செலுத்த வேண்டும். நேரில் செலுத்துபவர்கள் டிசம்பர் 15 இற்கும் இதனை செலுத்த வேண்டும். இதனை செலுத்த தவறுபவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து டிசம்பர் 29க்குள் பணம் பிடிக்கப்படும். காலியாக உள்ள வீடுகளுக்கான TLV மற்றும் THLV போன்ற வரிகள் பொருந்தும், என பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  7. அதிக வருமானம் பெறும் குடும்பங்கள் CDHR எனப்படும் குறைந்தபட்ச 20% வரி விதிப்பை உறுதிப்படுத்தும் பங்களிப்பை டிசம்பர் 1–15க்குள் 95% முன்பணமாக செலுத்த வேண்டும்; நீங்கள் இந்த வரிக்கு உட்படுகிறீர்களா, எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை impots.gouv.fr தளத்தில் கணக்கிட்டு தெரிந்து கொள்ளலாம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்