Paristamil Navigation Paristamil advert login

ரஜினி தனுஷ் கதையை நிராகரித்தரா ?

ரஜினி தனுஷ் கதையை நிராகரித்தரா  ?

1 மார்கழி 2025 திங்கள் 11:16 | பார்வைகள் : 149


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ‘கூலி’ திரைப்படம் வெளியானது. இதைத்தொடர்ந்து ரஜினி, ‘ஜெயிலர் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வரும் நிலையில் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் ரஜினி, கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். ரஜினியின் 173 வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 173 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஆரம்பத்தில் சுந்தர்.சி இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது

பின்னர் சுந்தர்.சி, அந்த திட்டத்திலிருந்து வெளியேற அவருக்கு பதிலாக ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் தலைவர் 173 படத்தை இயக்கப் போவதாக கிட்டத்தட்ட உறுதியான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனவே இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற டிசம்பர் 12 அன்று ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ், ரஜினியிடம் கதை ஒன்றை சொல்லியதாகவும், அந்த கதை அப்போது ரஜினிக்கு பிடித்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.அதன் பிறகு தனுஷும், ரஜினியும் அடுத்தடுத்த படங்களில் பிஸியானதால் அந்த படம் நடக்காமல் போனது. அடுத்தது தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் விவாகரத்து விவகாரம் பெரிதாக வெடிக்க, அது அப்படியே கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் ‘தலைவர் 173’ படத்தில் இருந்து சுந்தர்.சி விலகிய பிறகு ரஜினி தரப்பில் தனுஷ் அப்பொழுது கூறிய கதையை திரும்ப கேட்டதாகவும், தனுஷ் தரப்பில் அந்தக் கதை இப்பொழுதும் இருக்கிறது எனவும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். அதேசமயம் ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதையை ரஜினி ஓகே செய்ததால் தனுஷின் கதையை நிராகரித்து விட்டதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்