பாகிஸ்தான் ஜாம்பாவனின் வரலாற்றை உடைத்த ரோஹித்!
1 மார்கழி 2025 திங்கள் 09:28 | பார்வைகள் : 119
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸ்கள் அடித்த ஷாஹித் அப்ரிடியின் சாதனையை ரோஹித் ஷர்மா முறியடித்தார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி துடுப்பாட்டம் செய்து வருகிறது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 16 பந்துகளில் 1 சிக்ஸ், 2 பவுண்டரிகளுடன் 18 ஓட்டங்களில் பர்கர் ஓவரில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகிய இருவரும் கூட்டணி அமைத்தனர்.
இவர்களின் அதிரடி ஆட்டத்தின் மூலம் 14வது ஓவரிலேயே இந்திய அணி 100 ஓட்டங்களை கடந்தது.
ப்ரெனெலன் சுப்ராயெனின் ஓவரில் ரோஹித் ஷர்மா (Rohit Sharma) அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
அதன் பின்னர் ஜென்சென் ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார். இதன்மூலம் அவரது சிக்ஸர்களின் எண்ணிக்கை 352 ஆக உயர, பாகிஸ்தானின் ஜாம்பவான் வீரர் ஷாஹித் அப்ரிடியின் சாதனையை முறியடித்தார்.
இவர்களுக்கு அடுத்த இடங்களில் கிறிஸ் கெய்ல் (331), சனத் ஜெயசூரியா (270), எம்.எஸ்.தோனி (229) ஆகியோர் உள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan