Paristamil Navigation Paristamil advert login

பிரான்ஸ் டெலிவிஷன்ஸ் தலைமையகத்தில் வெடிகுண்டு மிரட்டல்!!

பிரான்ஸ் டெலிவிஷன்ஸ் தலைமையகத்தில் வெடிகுண்டு மிரட்டல்!!

1 மார்கழி 2025 திங்கள் 08:09 | பார்வைகள் : 3641


பரிஸின் 15ஆம் வட்டாரத்தில் உள்ள பிரான்ஸ் டெலிவிஷன்ஸ்(France Télévisions) தலைமையகம் நவம்பர் 29 சனிக்கிழமை மாலை குண்டு மிரட்டல் எச்சரிக்கையால் இரண்டு மணி நேரத்திற்கு காலி செய்யப்பட்டது. 

காவல்துறையினர்  மோப்பநாய்களின் உதவியுடன்  கட்டிடத்தைச் சோதனை செய்தபின், ஊழியர்கள் சனிக்கிழமை மாலை 7 மணிக்கு பிறகு மீண்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இந்த நேரத்தில் franceinfo ஒளிபரப்பும் அதன் இணையதளமும் பாதிக்கப்பட்டன.

ஒரு நபர் காவல்துறையினரிடம் "அரசுத் தொலைக்காட்சி குழுமத்தின் கட்டிடத்தை வெடிக்கச் செய்வேன்" என்று மிரட்டியதால் பாதுகாப்பு வலை அமைக்கப்பட்டது, ஆனால் அங்கு எந்த சந்தேக நபரும் இல்லை. 

அருகிலுள்ள Pont du Garigliano ரெயில் நிலையமும் தற்காலிகமாக இயங்கவில்லை. இதற்கு முன்பு, நவம்பர் 15 அன்று BFMTV அலுவலகங்களும் இதே போன்ற குண்டு மிரட்டல் காரணமாக காலி செய்யப்பட்டிருந்தன.

வர்த்தக‌ விளம்பரங்கள்