ரஷ்யாவின் ரகசிய எண்ணெய் கப்பல்கள் மீது ரகசிய தாக்குதல்
30 கார்த்திகை 2025 ஞாயிறு 13:56 | பார்வைகள் : 2899
கருங்கடல் ஊடாக பயணப்பட்ட ரஷ்யாவின் இரண்டு ரகசிய எண்ணெய் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் ரகசிய எண்ணெய் கப்பல்களை ட்ரோன்கள் தாக்குவதாக வெளியான காணொளிகள், BBC செய்தி நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷ்ய கப்பல்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தியது உக்ரைன் கடற்படை என்பது இதனால் உறுதியாகியுள்ளது. குறிவைக்கப்பட்ட எண்ணெய் கப்பல்கள் கைரோஸ் மற்றும் விராட் என்று துருக்கிய அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
இரண்டு கப்பல்களும் காம்பியா கொடியுடன் காணப்பட்டன, இரண்டும் துருக்கிய கடற்கரையில் தாக்கப்பட்டன. இதில் சனிக்கிழமை விராட் கப்பல் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ரஷ்யாவின் எண்ணெய் வருவாயை முடக்கும் வகையிலேயே, உக்ரைன் இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளது. 2022ல் உக்ரைன் மீதான படையெடுப்பை அடுத்து மேற்கத்திய நாடுகள் விதித்த தடைகளைத் தொடர்ந்து,
உத்தியோகப்பூர்வமற்ற கப்பல்களைப் பயன்படுத்தி, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதியை ரஷ்யா மூனெடுத்து வந்தது. இந்த ரகசிய கப்பல்கள் அனைத்தும், பல காலமாக பயன்பாட்டில் இருப்பவை அல்லது, பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டவை,
அத்துடன் இதன் உரிமையாளர்கள் யார் என்பதும் மர்மமாகவே உள்ளது. கருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் கைரோஸ் கப்பலும், கிழக்கே மையப் பகுதியில் விராட் கப்பலும் தாக்குதலுக்கு இலக்கானது.
லண்டன் பங்குச் சந்தை தரவுகளின்படி, இரண்டு கப்பலும் தடைகளுக்கு உட்பட்ட கப்பல்களின் பட்டியலில் உள்ளன. வெளியான தகவலின் அடிப்படையில், உக்ரைனின் Sea Baby ட்ரோன்கள் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், இந்தத் தாக்குதல்கள் உக்ரைனின் எச்சரிக்கையாகக் கருதப்படுகின்றன, கருங்கடலில் ரஷ்ய எண்ணெயை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மேற்கத்தியத் தடைகள் மட்டுமல்ல, நேரடித் தாக்குதலின் அபாயத்தையும் எதிர்கொள்ள் நேரிடும் என்பதைக் குறிக்கிறது.
இதனிடையே, இரவு நேரம் ட்ரோன் தாக்குததை அடுத்து, காஸ்பியன் பிராந்தியத்திலிருந்து எண்ணெய் கொண்டு செல்லும் ஒரு பெரிய கூட்டமைப்பு, ரஷ்ய கருங்கடல் துறைமுகமான நோவோரோசிஸ்கில் எண்ணெய் ஏற்றுவதை நிறுத்திவிட்டதாகக் கூறியது.
மட்டுமின்றி, இந்தத் தாக்குதல் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் காஸ்பியன் குழாய்வழி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவும் கஜகஸ்தானும் இந்த நிறுவனத்தில் முக்கிய பங்குதாரர்களாக உள்ளன, இதில் Exxon Mobil, Chevron மற்றும் Shell போன்ற மேற்கத்திய நிறுவனங்களும் பங்குதாரர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan