பொது மன்னிப்பு கோரும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு - உத்தியோகப்பூர்வமாக சமர்ப்பு
30 கார்த்திகை 2025 ஞாயிறு 13:56 | பார்வைகள் : 1212
இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கிடம் பொது மன்னிப்பு கோரும் கோரிக்கையை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தியோகப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை இஸ்ரேலின் ஜனாதிபதி மாளிகையும் உறுதி செய்துள்ளது. மேலும், இது ஒரு அசாதாரண கோரிக்கை என்பதையும், இது குறிப்பிடத்தக்க தாக்கங்களைக் கொண்டுள்ளது என்பதையும் ஜனாதிபதி அலுவலகம் அறிந்திருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பில் அனைத்து கருத்துகளையும் பெற்ற பிறகு, ஜனாதிபதி பொறுப்புடனும் உண்மையுடனும் கோரிக்கையை பரிசீலிப்பார் எனவும் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
நெதன்யாகு மட்டுமின்றி, அவரது மனைவி உட்பட குடும்ப உறுப்பினர்கள் பலரும் ஊழல் வழக்குகளில் சிக்கி விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணை இறுதிகட்டத்தை எட்டிய நிலையில், பிரதமர் நெதன்யாகு காஸா மீது போர் பிரகடனம் செய்தார். போர் காலம் என்பதால், ஊழல் விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது ட்ரம்பின் அழுத்தம் காரணமாக போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், காஸா மீதான தாக்குதலை நெதன்யாகு நிறுத்தவில்லை. அத்துடன், லெபனான் மீதும் சிரியா மீதும் புதிதாக தாக்குதலை தொடங்கும் முனைப்பில் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
காஸா போர் நிறுத்தம் எந்த இடையூறும் இன்றி நீடிக்கும் என்றால், தேர்தலை எதிர்கொள்ள நேரிடும். ஏற்கனவே பணயக்கைதிகளை மீட்க நெதன்யாகு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போரை முன்னெடுப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டு இஸ்ரேல் மக்களிடையே கோபத்தையும் அதிருப்தியையும் தூண்டியிருந்தது.
இதனாலையே, இஸ்ரேல் மக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலையும் ஏற்பட்டது. ஆனால், தனது அரசியல் ஆதாயத்திற்காக காஸா மீது கொடூரத் தாக்குதலை முன்னெடுத்ததுடன், பெண்கள், சிறார்கள் உட்பட பாலஸ்தீன மக்கள் 70,000 பேர்கள் இறப்புக்கு அவரது முடிவு காரணமானது.
மட்டுமின்றி, அவர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்ற விசாரணை முன்னெடுக்கப்பட்டதுடன், கைதாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அவர் தொடர்ந்து மறுத்து வருவதுடன், தாம் குற்றமற்றவர் என்றே சாதித்து வருகிறார்.
இஸ்ரேலில் அவரது அரசியல் செல்வாக்கு குறைந்து வருவதாலையே, தற்போது ஜனாதிபதியின் மன்னிப்பை அவர் கோரியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan